» சினிமா » செய்திகள்

கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் அஜித்...?

செவ்வாய் 15, மே 2018 11:09:59 PM (IST)

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் நடித்து வரும் அஜித், அப்படத்திற்குப் பிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பார்? என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடிப்பார் என்று கூறி வந்த நிலையில், விஷ்ணுவர்தன், இந்தி படம் இயக்க சென்றுவிட்டதால், அஜித்தை இயக்க கூடிய இயக்குநர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தை வைத்து கெளதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் எதிர்ப்பார்த்த வெற்றிப் பெறவில்லை என்றாலும், தான் நடித்த படங்களில் என்னை அறிந்தால் அஜித்துக்கு பிடித்த படம் என்பதால், அவர் கெளதம் மேனன் மீது மரியாதை வைத்திருக்கிறாராம். அதனால், அவரது படத்தில் மீண்டும் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி வரும் கெளதம் மேனன், அப்படத்திற்கு பிறகு மாதவனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதற்கிடையே அஜித்துக்காக கதை ஒன்றை எழுதியுள்ள அவர், அதை சொல்வதற்காக அஜித்திடம் நேரம் கேட்டிருக்கிறாராம். தற்போது விஸ்வாசம் படப்பிடிப்பில் இருக்கும் அஜித், நேரம் கிடைத்தால் கெளதம் மேனனிடம் கதை கேட்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அஜித் மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிப்பது உறுதி என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், அஜித்தின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory