» சினிமா » செய்திகள்

பாட்ஷா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் பாலகுமாரன்: ரஜினிகாந்த் உருக்கம்

செவ்வாய் 15, மே 2018 6:33:49 PM (IST)

பாட்ஷா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் பாலகுமாரன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனும திக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் (71) இன்று மதியம் சிகிச்சை பலனின்றி கால மானார். பாலகுமாரனின் மறைவு அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன், வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.பாலகுமாரனின் உடல் வைக்கப்பட்டுள்ள அவரது மைலாப்பூர் இல்லத்திற்கு அஞ்சலி செலுத்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்திருந்தார். அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:   எழுத்தாளர் பாலகுமாரன் எனது மிக நெருங்கிய நண்பர். அவர் மிகப் பெரிய எழுத்தாளர். எனது பாட்ஷா படத்திற்கு அவர் வசனம் எழுதினர். அதன் பின்னர் வேறு ஒரு படத்திற்கு வசனம் எழுத அழைத்த பொழுது, தற்பொழுது இலக்கியமும் ஆன்மிகமும் எனது உலகம் என்று தெரிவித்தார்.இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory