» சினிமா » செய்திகள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் ஆகவில்லை: அரவிந்த்சாமி வருத்தம்

வெள்ளி 11, மே 2018 12:11:11 PM (IST)பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் ரிலீஸ் ஆகாததால் நடிகர் அரவிந்த்சாமி ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மம்மூட்டி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் பாஸ்கர் தி ராஸ்கல். சித்திக் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தமிழ் ரீமேக்கில் மம்மூட்டி வேடத்தில் அரவிந்த்சாமி நடித்தார். படத்துக்கு பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்று தலைப்பு வைக்கப்பட்டது. நாயகியாக அமலா பாலும், குழந்தையாக நைனிகாவும் நடித்துள்ளனர். ரோபோ சங்கர், சூரி உள்ளிட்ட பலரும் படத்தில் உள்ளனர்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து தணிக்கை செய்யப்பட்டு படம் வெளியாவதற்குத் தயாராக இருந்த நிலையில், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பணப் பிரச்சினை காரணமாக படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் பிரச்சினைகள் சுமுகமாக முடிக்கப்பட்டு அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படம் வெளியாவது தள்ளிப்போவது குறித்து அரவிந்த்சாமி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,  பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. மிகவும் அதிகமான அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்ற பிறகும் படம் வெளியாவது தள்ளிப்போனது வருத்தத்தை அளிக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. படம் தள்ளிப்போனது தொடர்பாக எந்தக் காரணமும் தெரியவில்லை. எப்போதும் படத் தயாரிப்பாளருக்கு நான் உறுதுணையாகவே இருந்துள்ளேன். 

உங்களைப் போன்று நானும் படம் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். இப்படம் எப்போது ரிலீஸ் என்பதை என் ட்விட்டரில் குறிப்பிடமாட்டேன். இப்படத்தைப் பார்க்கும் போது நீங்கள் உண்மையில் ஜாலியாக உணர்வீர்கள். முழுமையான பொழுதுபோக்குப் படம் பார்த்த அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். ரிலீஸ் ஆகும் மற்ற படங்கள் பெரும் வெற்றிபெற வாழ்த்துவதற்கான வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்கிறேன் என்று அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory