» சினிமா » செய்திகள்

பழம்பெரும் நடிகர் நீலு உடல்நலக் குறைவால் மரணம்

வியாழன் 10, மே 2018 7:12:55 PM (IST)

பழம்பெரும் நடிகர் நீலகண்டன்(82) என்கிற நீலு உடல்நலக் குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார். 

நீலகண்டன் ஜூலை 26, 1936-ஆம் ஆண்டு பிறந்த நீலுவின் பூர்வீகம் கேரளாவிலுள்ள மஞ்சேரி எனும் ஊர். நாடகத் துறையில் தனது ஏழாவது வயது முதற்கொண்டே நடிக்கத் தொடங்கியவர். நடிகர் சோவின் விவேக் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் 50 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவர். 

சுமார் 7,000க்கும் மேலான மேடை நாடகங்களில் நகைச்சுவை பாத்திரங்களில்  இவர் தோன்றி சாதனை புரிந்துள்ளார். திரைப்படங்களில் 1966-ஆம் ஆண்டு நடிக்கத் தொடங்கி  நடித்து வருபவர். இதுவரை 160 படங்களுக்கு மேல் நடித்து இருப்பவர்.அந்நியன், பம்மல் கே. சம்பந்தம், வீராப்பு, பெரியார் போன்ற  படங்களிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வயோதிகத்தால்உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நீலு இன்று சென்னையில் மரணம் அடைந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory