» சினிமா » செய்திகள்

இன்று தலைவர், நாளை...? தனுஷ் பேச்சு - ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு!!

புதன் 9, மே 2018 8:09:36 PM (IST)

இன்று தலைவர், நாளை...’ என பேசிக் கொண்டிருக்கும்போது தனுஷ் இடைவெளி விட்டதால், ரசிகர் கூட்டம் ஆர்ப்பரித்தது.

‘காலா’ இசை வெளியீட்டு விழாவில், பேசிய தனுஷ், "தலைவரின் ‘பாட்ஷா’ படம் ரிலீஸானபோது நான் ரொம்ப சின்னப் பையன். 10 அல்லது 11 வயதிருக்கும். அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் காசெல்லாம் திருடி, விடியற்காலையில் இருந்து வரிசையில் நின்று, ஐந்தரை ரூபாய் டிக்கெட் எடுத்து முன் பெஞ்சில் அமர்ந்து கத்தி கத்திப் படம் பார்த்த ரசிகன் நான். அந்த ரசிகன், இன்று அவரை வைத்துப் படம் தயாரிக்கிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். அதனால், இது தனுஷ் என்ற ஒரு நடிகர் தயாரித்த படமல்ல, வெங்கடேஷ் பிரபு என்ற ஒரு ரசிகன் தயாரித்த படமாக இதைப் பார்க்கிறேன். அதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

முதலில் வில்லன், பிறகு குணச்சித்திர நடிகர், அப்புறம் ஹீரோ, அப்புறம் ஸ்டார், அப்புறம் ஸ்டைல் மன்னன், அப்புறம் சூப்பர் ஸ்டார், இன்று தலைவர், நாளை...” என்று பேச்சில் இடைவெளி விட, அரங்கில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். தொடர்ந்த தனுஷ், "அது இறைவன் கையில். உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்” என்று முற்றுப்புள்ளி வைத்தார். ஆக, ரஜினியின் அரசியல் பயணத்தைத்தான் அவர் சொல்லாமல் சொன்னார். அது தெரிந்துதான் ரசிகர் கூட்டம் அப்படி ஆர்ப்பரித்தது. ஆனால், அரசியல் பற்றிப் பேசாமல் ரஜினி பேச்சை முடித்துக் கொண்டதில் அனைவருக்கும் வருத்தமே!


மக்கள் கருத்து

Nairமே 15, 2018 - 10:50:15 AM | Posted IP 202.1*****

thamil naadai kedukira naikuttom

ராமநாதபூபதிமே 14, 2018 - 05:29:26 PM | Posted IP 141.1*****

நாளைக்கு பொணம் மூடிட்டு போவியா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory