» சினிமா » செய்திகள்

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம்!

புதன் 9, மே 2018 12:46:11 PM (IST)

சிவகார்த்திகேயன் நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கும் படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சதீஷ் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் வேலைக்காரன் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா. ராஜேஷ் இயக்கத்தில் "பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இதற்கு முன்பு அவர் நடித்திருந்தார். இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், சைரா நரசிம்ம ரெட்டி, கோகோ, விசுவாசம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. கடவுள் இருக்கான் குமாரு படத்தையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தை ராஜேஷ் இயக்கவுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடித்து வருகிறார்.இதையடுத்து "இன்று நேற்று நாளை" படத்தை இயக்கிய ரவிக்குமாரின் அடுத்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தப் படம் 2019-ல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிற நிலையில் மூன்றாவதாக எம். ராஜேஷின் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory