» சினிமா » செய்திகள்

பெண் வேடத்தில் அனிருத்... வைரலாகும் புகைப்படம்!!

வியாழன் 22, மார்ச் 2018 5:21:07 PM (IST)



இசையமைப்பாளர் அனிருத்தின் பெண் வேடமிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இளம் இசையமைப்பாளர்கள் அனிருத் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜீத், விஜய் படங்களுக்கு ஏற்கெனவே இசையமைத்துவிட்டார். அடுத்து அவரின் நீண்டநாள் கனவாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத்துக்கு தற்போது இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். 

படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையை தாண்டி அனிருத் ஒரு சில படங்களில் தலையை காட்டினாலும் தற்போது நிஜமாகவே அவர் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அப்படியே அச்சு அசலாக பெண் போல காட்சியளிக்கிறார் அனிருத். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory