» சினிமா » செய்திகள்

உடல் எடையை குறைக்க சினேகா தீவிர உடற்பயிற்சி

செவ்வாய் 20, மார்ச் 2018 12:10:12 PM (IST)

தீவிர உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைக்கும் முயற்சியில் சினேகா ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த தம்பதிக்கு விகான் என்ற ஆண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் சினேகா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து இருந்தார். மீண்டும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். அவரது உடல் எடை கூடி இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு உதவியாக கணவர் பிரசன்னாவும் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று ஆலோசனைகள் கூறி வருகிறார். சினேகா உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory