» சினிமா » செய்திகள்

ரஜினியின் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் ... சன் பிச்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வெள்ளி 23, பிப்ரவரி 2018 4:45:26 PM (IST)ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் சில வேலைகள் இருப்பதால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை இயக்க சில இயக்குநர்களிடையே பலத்த போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பெற்றிருக்கிறார். ஜிகர்தண்டா, இறைவி படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்புராஜ் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கவிருக்கிறார். 

இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள், படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. ரஜினி நடித்து இரண்டு படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கும் சூழலிலும், அரசியல் என்ட்ரிக்கு மத்தியிலும் வந்த இந்த அறிவிப்பால் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர் ரஜினி ரசிகர்கள்.விஜய் 62 படத்தைத் தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் சூப்பர்ஸ்டார் படத்தையும் தயாரிக்கவிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory