» சினிமா » செய்திகள்

சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய ப்ரியா வாரியர்

வெள்ளி 16, பிப்ரவரி 2018 5:42:58 PM (IST)



கூகுள் தேடு பொறியில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி ப்ரியா பிரகாஷ் வாரியர் முதலிடம் பிடித்துள்ளார்.

மலையாளத்தில் ஒரு அதார் லவ் படத்திலிருந்து மானிக்க மலராயா பூவி என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடலை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்திருக்கிறார்கள். இதில் சில காட்சிகளே வந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர். ஒரே நாளில் இவருடைய ட்விட்டர் பக்கத்தில் (@priyapvarrier) பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையும் எகிறியது.

இந்நிலையில், தற்போது கூகுள் தேடு பொறியில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி ப்ரியா பிரகாஷ் வாரியர் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் 3 மில்லியன் பேர் இவரைப் பின்தொடர்கின்றனர். ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், கூகுள், இன்ஸ்டாகிராம் என இணையத்தின் சென்சேஷனாகவே மாறிவிட்டார் ப்ரியா பிரகாஷ் வாரியர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory