» சினிமா » செய்திகள்

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ஜிப்சி

செவ்வாய் 6, பிப்ரவரி 2018 12:41:23 PM (IST)ஜோக்கர் புகழ் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்திற்கு ஜிப்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஜீவா நடிப்பில் கலகலப்பு-2 படம் வருகிற 9-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து காலீஸ் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் கீ படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது.  இந்நிலையில், ஜீவா தற்போது, சாம் ஆண்டன் இயக்கத்தில் கொரில்லா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலிணி பாண்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ஜீவா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியது. இந்த படத்தை குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்க இருக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு நள்ளிரவு 12.01 மணிக்கு அறிவிப்பதாக படக்குழுவினர் தெரிவிந்திருந்தனர். அதன்படி அந்த படத்திற்கு ஜிப்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsThoothukudi Business Directory