» சினிமா » செய்திகள்

நடிகர் ரகுவரனின் இசை ஆல்பம்: ரஜினி காந்த் வெளியிட்டார்!!

வெள்ளி 2, பிப்ரவரி 2018 4:42:42 PM (IST)



மறைந்த  நடிகர் ரகுவரனின் இசை ஆல்பத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். பி.ஏ. பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய கூட்டுப்புழுக்கள் எனும் நாவலை இயக்குநர் ஆர்.சி.சக்தி படமாக்கியிருந்தார். அதில் முதன்மை பாத்திரமான அரவிந்தன் எனும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் ரகுவரன். மிக இயல்பாக அப்படத்தில் நடித்திருப்பார். 

அதன் பின்னர் தொடர்ந்து கை நாட்டு, மைக்கேல் ராஜ் உள்ளிட்ட பலத் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஆனாலும் எதிர் நாயகன் வேடங்களில் நடித்த பின்னர் தான் ரகுவரனின் நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ரகுவரன் நடித்த பாட்ஷா இன்றளவும் கொண்டாடப்படும் படங்களுள் ஒன்றாகும். இருவரும் இணைந்து மிஸ்டர் பாரத், ஷிவா, மனிதன், அருணாசலம், முத்து, சிவாஜி என பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். ரஜினியின் நல்ல நண்பராக ரகுவரன் இருந்தார்.

தனுஷுடன் நடித்த படமான யாரடி நீ மோகினி ரகுவரனின் கடைசிப் படமாக அனைவரின் நினைவில் உள்ளது. ஆனால் அவர்  கடைசியாக நடித்து வெளியான படத்தின் பெயர் சில நேரங்களில். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008-ல் காலமானார். ரகுவரனைப் பற்றி பலருக்கும் தெரியாத செய்தி அவருடைய இசை ஆர்வம். ரகுவரன் இசையமைத்து பாடியிருந்த பாடல்களை ஒரு தொகுப்பாக ரகுவரன் எ ம்யூசிக் ஜர்னி என்ற தலைப்பில் அண்மையில் ஒரு இசை நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் குறுந்தகடை நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி 31-ம் தேதி அவரது இல்லத்தில் வெளியிட்டார். ரகுவரனின் மனைவி ரோஹினியும் மகன் ரிஷியும் அதனைப் பெற்றுக் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory