» சினிமா » செய்திகள்

குடும்ப எதிர்ப்பை மீறி காதலனைக் கரம்பிடித்த சின்னத்திரை நட்சத்திரம்!!

புதன் 6, டிசம்பர் 2017 4:51:13 PM (IST)

தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர் ஹுசைனை பதிவுத் திருமணம் செய்து கொண்டார் மணிமேகலை.

சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மணிமேகலை. ஹுசைன் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்திருக்கிறார். ஆனால், அவருடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே, இன்று (டிசம்பர் 6) பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனது திடீர் பதிவு திருமணம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் மணிமேகலை கூறியிருப்பதாவது: நானும் ஹுசைனும் இன்று திருமணம் செய்து கொண்டோம். இது ஓர் அதிரடி பதிவுத் திருமணம். என் திருமண விஷயத்தில் என் தந்தையை என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை. எல்லாம், என் கை மீறிச் சென்றதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒருநாள் என் தந்தை என்னைப் புரிந்து கொள்வார் என நான் நம்புகிறேன். காதலுக்கு மதமே இல்லை. லவ் யு ஹுசைன். ஸ்ரீராமஜெயம், அல்லா. இவ்வாறு மணிமேகலை தெரிவித்திருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory