» சினிமா » செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார்!

புதன் 6, டிசம்பர் 2017 12:48:35 PM (IST)

பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 63.

பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன், ஐதராபாத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். தஞ்சாவூரைச் சேர்ந்த ஆதித்யன்,1992-ல் கார்த்திக் நடித்த "அமரன்" படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகர் கார்த்திக்கை பாடவைத்து, அவர் இசையமைத்த "வெத்தலப் போட்ட சோக்குலதான்" பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தது.

சீவலப்பேரி பாண்டி படத்தில் "கிழக்கு செவக்கையிலே" பாடலும் தமிழகம் எங்கும் ஹிட்டாகி, அனைவராலும் முனுமுனுக்கப்பட்டது. மின்மினிப் பூச்சிகள், லக்கிமேன், அசுரன், மாமன் மகள் உள்பட சுமார் 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், சமையல் கலை வல்லுநராக வலம் வந்த அவர், ஜெயா டிவியில் ஆதித்யனின் கிச்சன் என்ற சமையல் நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளார். 63 வயதான ஆதித்யன் உடல் நலக்குறைவால்ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory