» சினிமா » செய்திகள்

ஏப்ரலில் 2.0 வெளியீடு: தெலுங்கு திரையுலகில் எதிர்ப்பு!!

செவ்வாய் 5, டிசம்பர் 2017 3:55:24 PM (IST)

ஏப்ரலில் ரஜினியின் 2.0 படத்தை வெளியிட தெலுங்கு திரையுலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. இதன் இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 26-ம் தேதி வெளியீடாக இருந்த 2.0, கிராபிக்ஸ் பணிகள் தாமதத்தால் ஏப்ரலில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

2.0 வெளியீட்டு தேதி மாற்றத்தால் தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் Bharat Ane Nenu மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் Naa Peru Surya ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இவ்விரண்டு படங்களின் தயாரிப்பாளர்களுமே கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். இரண்டு முக்கிய தயாரிப்பாளர்களின் அதிருப்தியால் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை விரைவில் அறிவிக்கவுள்ளதாக தெரிகிறது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிDec 6, 2017 - 12:41:18 PM | Posted IP 103.3*****

எங்குமே வெளியிடவே வேண்டாம். உங்களுக்கு புண்ணியமா போகும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory