» சினிமா » செய்திகள்

மீண்டும் தொடங்கியது விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு

வெள்ளி 1, டிசம்பர் 2017 5:55:04 PM (IST)கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, ராகுல் போஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு அதன் அடுத்தப் பாகமான விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் முழுமையடையாததால் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் சிறிது இடைவெளிக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார் கமல். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஹிந்தி, தெலுங்குப் பதிப்புகளுக்கான டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் கடைசிக்கட்டப் படப்பிடிப்பைத் தற்போது தொடங்கியுள்ளார் கமல். சென்னையில் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி தரும் மையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கமல், ஆண்ட்ரியா கலந்துகொண்டுள்ளார்கள். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள். இந்த ஒரு மாதத்தில் இறுதிக்கட்டப் பணிகளை முடித்துக்கொண்டு ஜனவரி மாத இறுதியில் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட கமல் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsThoothukudi Business Directory