» சினிமா » செய்திகள்

ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த்: படபூஜையுடன் தொடக்கம்

வியாழன் 30, நவம்பர் 2017 12:35:22 PM (IST)"ஹர ஹர மஹா தேவகி" சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்திற்கு கஜினிகாந்த் என பெயரிடப்பட்டுள்ளது. 

ஆர்யாவின் புதிய படத்துக்கு கஜினிகாந்த் என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான பலே பலே மகாடிவோய் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. ஹர ஹர மஹா தேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கிய சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்க ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து வழங்குகிறார்.

இப்படத்தின் பூஜை நேற்று காலை நடைபெற்றது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வனமகன் சாயிஷா நடிக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா ஜி.கே.படத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்குத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory