» சினிமா » செய்திகள்

கார்த்திக் - கவுதம் கார்த்திக் இணையும் மிஸ்டர் சந்திரமௌலி: படப்பிடிப்பு தொடக்கம்

புதன் 29, நவம்பர் 2017 12:19:44 PM (IST)

கார்த்திக், கவுதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடிக்கும் "மிஸ்டர் சந்திரமௌலி" படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. 

"நான் சிகப்பு மனிதன்" படத்துக்குப் பிறகு திரு இயக்கும் படம் "மிஸ்டர் சந்திரமௌலி". கார்த்திக், கவுதம் கார்த்திக், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ், சதீஷ், ஜெகன், விஜி சந்திரசேகர், "மைம்" கோபி, மனோபாலா ஆகியோர் நடிக்கும் இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் இசையமைக்கிறார்.

படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், "தமிழ் சினிமாவில், பல வருடங்களுக்கு பிறகு, ஒரு பிரபல ஹீரோவும் அவரது மகனும் இணைந்து நடிக்கும் "மிஸ்டர் சந்திரமௌலி". கவுதமுடன் இணைந்து நடிக்க பல இயக்குநர்கள் கார்த்திக் சாரை இதற்கு முன்பு அணுகியுள்ளனர். ஆனால் அதற்கான சரியான கதை அமைந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என கூறிவிட்டார் கார்த்திக் சார். "அனேகன்" படம் மூலம் புதுப்பொலிவுடன் களமிறங்கி கலக்கிய கார்த்திக் சார் தற்பொழுது "தானா சேர்ந்த கூட்டம்" படத்தில் நடித்து வருகிறார். 

தந்தை- மகன் பற்றிய ஒரு மிகவும் சுவாரஸ்யமான கதையை இயக்குனர் திரு, கார்த்திக் சாரிடம் சொன்னபோது, அது அவருக்கு மிகவும் பிடித்து போக, இப்படத்தில் நடிக்க உடனே சம்மதித்தார்.  ஒரே ஷெட்டியூலில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்கும் வகையில் கார்த்திக் சாரும் கவுதம் கார்த்திக்கும் அவரது தேதிகளை மொத்தமாகத் தந்துள்ளனர். படப்பிடிப்பு இடைவிடாமல் சென்னை, புதுச்சேரி மற்றும் பல இடங்களில் நடக்கவுள்ளது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory