» சினிமா » செய்திகள்

கமல்ஹாசன், ரஜினிகாந்திற்கு ஆந்திர மாநில அரசு விருது

செவ்வாய் 14, நவம்பர் 2017 8:41:06 PM (IST)

கமல்ஹாசன், ரஜினிகாந்திற்கு ஆந்திர மாநில அரசு என்.டி.ஆா். தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில அரசு ஒவ்வொரு வருடமும் தெலுங்கில் வெளியாகும் சிறந்த படங்களைத் தோ்ந்தெடுத்து நந்தி விருதை வழங்கி வருகிறது. மேலும் அத்துடன் என்.டி.ஆா். தேசிய விருது, பின்.என்.ரெட்டி மாநில விருது, நாகிரெட்டி & சப்ரணி மாநில விருது, ரகுபதி வெங்கையா மாநில விருது மற்றும் நடுவா் சிறப்பு விருது ஆகிய சிறப்பு விருதுகளையும் வழங்கி வருகிறது.

2014, 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் என்.டி.ஆா். தேசிய விருது 2014ம் ஆண்டு கமல்ஹாசனுக்கும், 2016ம் ஆண்டு ரஜினிகாந்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கான பி.என்.ரெட்டி மாநில விருது, பாகுபலி இயக்குநா் எஸ்.எஸ். ராஜமௌலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads



Thoothukudi Business Directory