» சினிமா » செய்திகள்

சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் நமீதாவின் கல்யாண அழைப்பிதழ்

செவ்வாய் 14, நவம்பர் 2017 1:11:55 PM (IST)
நடிகை நமீதா, வீரா திருமண பத்திரிகை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நமீதா. அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் தனக்கும் வீரா என்பவருக்கும் வரும் நவம்பர் 24ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக ஒரு வீடியோ மூலம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இவர்களது திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அதை பார்த்த நிறைய பேர் அது குறித்து கருத்து பதிவிட்டும் ஷேர் செய்தும் வருகின்றனர்.

இவர்களின் திருமண வரவேற்பு 22ம் தேதி திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறவுள்ளது. அதையடுத்து நவம்பர் 24ம் தேதி வெள்ளிக்கிழமை இஸ்கான் கோவிலில் காலை இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory