» சினிமா » செய்திகள்

மசாலா பட பார்முலா தவறு என அறம் நிருபித்துள்ளது : அமலாபால் பாராட்டு

திங்கள் 13, நவம்பர் 2017 7:54:47 PM (IST)

அறம் போன்ற சிறப்பான படத்தில் தைரியமாக நடித்த நயன்தாராவை அமலாபால் பாராட்டியுள்ளார்.

கோபி நயினார் இயக்கத்தில் நடிகை நயன்தாரா மாவட்ட கலெக்டர் மதிவதனியாக நடித்த அறம் படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹீரோக்களுக்காக படம் எடுக்கப்படும் பார்முலா தவறு என நிரூபித்த நயன்தாராவுக்கு , நடிகை அமலா பால் டுவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அமலா பால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நல்ல திரைப்படம் சாதிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் கோபி நயினார், நயன்தாராவுக்கு எனது பாராட்டுக்கள். நட்சத்திர ஹீரோக்களுக்காக மசாலா படம் எடுக்கப்படும் பார்முலா தவறு என அறம் நிரூபித்துள்ளது. நல்ல கதை மற்றும் நல்ல நடிகர்கள் தான் முக்கியம் என அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory