» சினிமா » செய்திகள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்பாரா? நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

வெள்ளி 10, நவம்பர் 2017 5:21:59 PM (IST)

நமது காலத்தின் மிகப் பெரிய தவறுக்காக, அதை செய்தவர்கள் (பிரதமர் மோடி) மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்களா? என நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி  பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறி இருப்பதாவது: பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது பணக்காரர்கள் தங்கள் கறுப்பு பணத்தை எப்படி மாற்ற வேண்டும் என்ற வழியை கண்டுபிடித்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டனர். 

இதில் சிக்கியது அப்பாவி மக்கள்தான். இந்த நடவடிக்கை நாட்டு மக்களை உதவியற்றவர்களாய் ஆக்கி சீர் குலைத்தது. ஏழை, மக்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். நமது காலத்தின் மிகப் பெரிய தவறுக்காக, அதை செய்தவர்கள் (பிரதமர் மோடி) மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்களா? இவ்வாறு பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

சாமிNov 16, 2017 - 06:20:22 PM | Posted IP 103.5*****

ஒரு மிக சரியான செயலுக்கு எவனாவது வருந்துவானா - என்ன சொல்வது - இவருக்கு என்ன நஷ்டமோ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory