» சினிமா » செய்திகள்

பிக்பாஸ் ஜூலியின் கழுத்தில் கத்தி வைத்த இயக்குநர்!!

வெள்ளி 10, நவம்பர் 2017 12:54:14 PM (IST)

பிக்பாஸ் ஜூலியின் கழுத்தில் ஒருவர் கத்தி வைத்திருப்பது, போன்று சமூக வலைதாளங்களில் வெளியானது விளம்பர படம் எனத் தெரியவந்துள்ளது. 

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடைப்பெற்றது. அதில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சினிமா பிரபலம் இல்லாதவை ஜூலி மட்டும்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களுக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. 

ஜூலிக்கும் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சேர்ந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் ஜூலியின் கழுத்தில் ஒருவர் கத்தி வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக  வலைதளங்களில் வைரலானது. அது யார் என தற்போது தெரியவந்துள்ளது. அதில் பிரபல விளம்பர பட இயக்குநர் பாபா பகுர்தீன்தான் அது. ராமநாதபுரம் இலாஹி ஷாப்பிங் மாலுக்காக அவர் இயக்கிய விளம்பர வீடியோவில் ஜூலி நடித்துள்ளார்.  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.
 
இந்த நிலையில் மால் உரிமையாளர் ஜூலி வேண்டாம் என கூறியும் பகுர்தீன் பலமுறை வற்புறுத்தி ஒத்துகொள்ள வைத்துள்ளார். மேலும் பகுர்தீன் இயக்கவுள்ள ஒரு படத்தில் ஜூலி ஹீரோயினுக்குச் சமமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக  தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பகுர்தீனை பலரும் பாராட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory