» சினிமா » செய்திகள்

தெலுங்குத் திரையுலகம் அமோக வரவேற்பு: அனிருத் மகிழ்ச்சி!

புதன் 8, நவம்பர் 2017 12:09:28 PM (IST)

தெலுங்குத் திரையுலம் அளித்த அமோக வரவேற்பால் இசையமைப்பாளர் அனிரூத் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார். 

தமிழில் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் வேலைக்காரன் என இரு படங்களுக்கு மட்டும் இசையமைத்து வருகிறார் அனிருத். புதுமுகங்கள் நடித்துள்ள ஆகோ என்கிற படத்துக்கும் அவர் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில் தெலுங்குத் திரையுலகம் அனிருத்துக்குப் பெரிய பட வாய்ப்புகளை அளித்து அவரை அந்தப் பக்கம் இழுத்துள்ளது. திரிவிக்ரம் இயக்கும் பவன் கல்யாணின் 25-வது படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அதேபோல திரிவிக்ரமின் அடுத்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ளார். 

இதற்கு அனிருத் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அனிருத்தின் Bewajah என்கிற மியூசிகல் வீடியோ  நவம்பர் 11 அன்று வெளியிடப்படுகிறது.  பவன் கல்யாண் படத்துக்காக அனிருத் இசையமைத்த Baitikochi Chuste என்கிற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாடல் வெளியான சில மணிநேரங்களில் 1.5 மில்லியன் (15 லட்சம்) பார்வைகளை அடைந்தது. இதையடுத்து ட்வீட் செய்த அனிருத், 8 மணி நேரங்களில் 1 மில்லியன் பார்வைகள். தெலுங்குத் திரையுலம் எனக்கு அளிக்கும் அமோகமான வரவேற்பு இது எனத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory