» சினிமா » திரை விமர்சனம்

நம்ம வீட்டுப் பிள்ளை: அண்ணன், தங்கை பாசம்!!

சனி 28, செப்டம்பர் 2019 12:33:59 PM (IST)



வைத்தியராக இருக்கும் பாரதிராஜாவின் பேரன் சிவகார்த்திகேயன். இவர் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா சமுத்திரகனி இறந்து விடுகிறார். பாரதிராஜாவின் மற்ற மகன்கள் சிவகார்த்திகேயன் குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். 

இந்நிலையில், தன்னுடைய தங்கை ஐஸ்வர்யா ராஜேஷை நல்ல ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து தனது கெத்தை காட்ட நினைக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்காக ஊர் முழுவதும் மாப்பிள்ளை தேடுகிறார்.  ஆனால், யாருமே கட்டிக்கொள்ள முன்வராத நிலையில், நட்டி ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார். சிவகார்த்திகேயனுடன் உள்ள ஒரு முன்பகையை மனதில் வைத்து கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து கொண்டு பழி வாங்க தொடங்குகிறார் நட்டி. 

இறுதியில் இதை எப்படி சிவகார்த்திகேயன் சமாளித்தார்? அண்ணன், தங்கை பாசம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. ஆக்‌ஷன் ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், இந்தப் படத்தில் பொறுப்பான குடும்பத்து பையனாக தன்னைக் காட்டிக் கொள்ள ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார். கிராமத்து இளைஞனாக வேட்டி சட்டை அணிந்து படம் முழுவதுமே பயணிக்கிறார். கிளைமேக்ஸ் எமோஷ்னல் காட்சியில் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறார்.

தங்கையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில், ஹீரோவிற்கு தங்கையாக நடிக்க தனி தைரியம் வேண்டும். அதை நடிப்பில் அசத்தியுள்ளார். கதாநாயகியாக நடித்திருக்கும் அனு இம்மானுவேல், சிவகார்த்திகேயனை காதலிக்கிறார். டூயட் பாடுகிறார். மற்றபடி பெரியதாக வேலை இல்லை.

இயக்குனர் பாரதிராஜா தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். வேலாராமமூர்த்தி, சமுத்திரகனி, ஆர்.கே.சுரேஷ், அர்ச்சனா, சூரி, சுப்பு, நட்டி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் பாண்டிராஜ் இதற்கு முன்பு இயக்கியிருந்த ’கடைக்குட்டி சிங்கம்’ படமும் கிராமத்துப் பின்னணியில் வெளியானதால், இந்த படமும் அதே சாயலில் இருக்கிறது. அந்த வெற்றி இதில் கிடைப்பது என்பது கேள்விக்குறிதான். படம் பார்ப்பதற்கு சீரியல் போன்று இருக்கிறது. அண்ணன் - தங்கை பாசம், தாத்தா - பேரன் பாசம், அம்மா - மகன் பாசம், சித்தப்பா பாசம் என பாசப்பிணைப்பாக படத்தை உருவாக்கி இருக்கிறார்.

நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். தனக்கே உரிய பாணியில் இசையமைத்து அதில் கிராமிய இசை கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் இமான். மொத்தத்தில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ சீரியலை விரும்பும் பெண்களை கவரும் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory