» சினிமா » திரை விமர்சனம்

தில்லுக்கு துட்டு - சந்தானத்திற்கு நல்லா கல்லா கட்டும்

வியாழன் 7, ஜூலை 2016 7:54:27 PM (IST)100 படங்களுக்கு மேல் காமெடியனாக நடித்துள்ள சந்தானம், தற்போது இனி ஹீரோவாக மட்டும் நடிப்பேன் என்ற முடிவை எடுத்தபின் நடித்த 2படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தான் முதலில் அறிமுகமான லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் நடித்து வெளிவந்துள்ள படம் தில்லுக்கு துட்டு.

கதை

முதலில் சிவன் கொண்டை மலையை காட்டி, ஒரு அமானுஷ்ய பேய் பங்களா அங்கு பேய் எப்படி வந்தது என்பதற்கு ஒரு ப்ளாஷ்பேக் வைத்து திகில் கிளப்புகிறார்கள்.சென்னையில் இருக்கும் சந்தானத்துக்கும் நாயகி ஷனாயாவிற்கும் காதல் மலர்கிறது. சந்தானம் காதலில் லயிக்கும் கட்டத்தில் இருவரின் குடும்பத்தினரும் அந்த பங்களாவிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அங்கு எதற்காக செல்கிறார்கள் ? பேய் இவர்களை என்ன செய்தது என்பதை காமெடி கலாட்டாவாக சொல்லியிருக்கும் படம் தான் இந்த தில்லுக்கு துட்டு.

இனிமே ஹீரோதான் என பட்டையை கிளப்பி வரும் சந்தானம், இப்படத்திலும் இவருக்கு சூட் ஆகும் கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார்,  இப்படத்தின் மூலம் சந்தானம் ஹீரோவாக ஜெயித்திருக்கிறார் என்ற தைரியமாக சொல்லாம். காமெடி, டான்ஸ், ஃபைட் என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறார். அழகு பதுமையாக வந்து செல்லும் ஷனாயா நடிப்பிலும் எந்த குறையும் வைக்கவில்லை. தற்போது பெரும்பாலான படங்களில், மொட்டை ராஜேந்திரனை பார்க்கலாம். இப்படத்திலும் செம பெர்ஃபாமன்ஸ் கொடுத்து அப்லாஸ் அள்ளுகிறார்.

நானும் ரௌடிதானுக்கு பிறகு வில்லன் ஆனந்த் ராஜிற்கு வெயிட்டான ரோல் அதிலும் காமெடி பண்ணரேன்னு நான் பழைய வில்லன்றத மறந்துறாத என சொல்லும் இடம் மாஸ்! இவ்வளவு காமெடி நடிகர்கள் இருந்தாலும் கருனாஸும் தனித்து தெரியும் அளவில் சிரிப்பு காட்டுகிறார்.சௌரப் ஷுக்லா,T M கார்த்திகின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.வாராவாரம் வரும் காமெடி பேய் படங்கள் இதுவும் ஒன்று என்றாலும் இதனின் பலமே எல்லா நகைச்சுவைகளுக்கும் ஆடியன்ஸிடம் இருந்து நல்ல ரெஸ்பாண்ஸ் வருகிறது.படத்தின் ஆரம்பத்தில் சீரியஸ் பேய் படம் போல ஆரம்பித்தாலும் பின்னர் காமெடி திரைக்கதை மூலம் சரவெடியை கொளுத்தி விடுகிறார் இயக்குனர் ராம்பாலா. பின் இரண்டாம் பாதியின் ஆரம்பம் சற்று இழுவையாக அரம்பித்து பின் சுதாரித்து படம் நகர்கிறது.ஆனால் படத்தில் ஹீரோ என்ன செய்கிறார்,திபத்திய சாமியாருக்கு தமிழ் மிக எளிதாக வருவது, ஊரையே அடித்து போடும் உக்கிரமான பேய் இவர்களின் விளையாட்டில் பங்கேற்கிறது என பல லாஜிக் மீறல்களும் இருக்கதான் செய்கிறது.

தமனின் இசையில் பாடல்கள் படத்தோடு பார்க்க நன்றாக உள்ளது, கார்த்திக் ராஜாவின் பிண்ணனி படத்திற்கு பலம் சேர்கிறார். தீபக் குமார் பாடியின் ஒளிப்பதிவு ஒரு பக்கம் மிகவும் வண்ணமயமாகவும்கவும் இன்னொரு பக்கம் பேய் பங்களாவில் இருட்டிலும் திகில் காட்டுகிறது.

என்னதான் இது பேய் படம் என்றாலும் இதில் பேய் தமிழ் சினிமா ஹீரோயின்ஸ் போல வந்து தலையை காட்டிவிட்டு சென்றுவிடுகிறது என்பது காமெடி.

ப்ள‌ஸ்:

படத்தின் காமெடிக்கு பஞ்சமே இல்லை,அனைத்து நடிகர்களும் அவர்களின் பங்கை மிச சரியாக செய்துள்ளனர்.படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கு பாரட்டத்தக்கது.

மைனஸ்:

முதல் பாதியை பார்க்கும் போது இரண்டாம் பாதி சற்று சுவாரஸ்யம் குறைவாக தோன்றுகிறது, தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். லாஜிக் மீறல்களிலும் சில க்ளீஷேக்களையும் அதிக கவனம் செலுத்தி குறைத்திருக்கலாம்.

தில்லுக்கு துட்டு - சந்தானத்திற்கு நல்லா கல்லா கட்டும்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory