» சினிமா » திரை விமர்சனம்

சுந்தர்.சியின் அரண்மனை 2 : காமெடி கலந்த த்ரில் அனுபவம்

வெள்ளி 29, ஜனவரி 2016 7:31:09 PM (IST)அரண்மனை படத்திற்கு பிறகு சித்தார்த்,ஹன்சிகா, த்ரிஷா, சூரி,மனோபாலா, கோவை சரளா,பூனம் பஜ்வா நிறைய நட்சத்திரங்களுடன் அரண்மனை 2வை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார். முதல் பாதியில் பேய் வந்து காட்டி செல்வது, இரண்டாம் பாதியில் பேய்க்கு ஒரு சோக பிளேஷ்பேக், அப்புறம் பேயை ஒட்டிவிடுவது இதுதான் தமிழ் சினிமாவின் பேய் பட பார்முலா. முந்தைய படத்தின் கதையை உல்டா செய்து அரண்மனை2வை எடுத்திருக்கிறார்.

கதை :

ஒரு மிகப்பெரிய அரண்மனையில் பெரிய ஜமீன்தாரான ராதாரவி தனது மகன்கள் சித்தார்த் மற்றும் சுப்பு பஞ்சுவுடன் வாழ்ந்து வருகிறார். இந்த அரண்மனையிலேயே அண்ணன் தங்கைகளான மனோபாலாவும், கோவை சரளாவும் வேலைக்காரர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். சித்தார்த்துக்கு அவரது முறைப்பெண்ணான திரிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. திருமணத்துக்கு கொஞ்ச நாட்கள் இருக்கும்போது இரண்டுபேரும் வெளியூர் சென்றுவிடுகிறார்கள். அந்த நேரத்தில் ராதாரவி திடீரென கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார்.இதனால் இருவரும் அவசரமாக அரண்மனைக்கு திரும்பி, ராதாரவியை கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறார்கள். 

அந்த அரண்மனையில் ஒரு கருப்பு உருவம் நடுமாடுவது, கோமா நிலையில் இருக்கும் ராதாரவி திடீரென அந்தரத்தில் தொங்குவதுபோல திரிஷாவுக்கு தெரிகிறது. இதனால், பயந்துபோய் அரண்மனையில் உள்ளவர்களிடம் சொல்கிறார். ஆனால் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். உடனே த்ரிஷா பயந்துபோய் அண்ணன் சுந்தர்.சியின் உதவியை நாடுகிறார். அவர் அரண்மனையில் ந‌டக்கும் சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை. வழக்கம் போல த்ரிஷா உடம்புக்குள்ள ஆவி ஹன்சிகா உள்ளே புகுந்து மோகினி ஆட்டம் ஆடுகிறார். அதை சித்தார்த்தும், சுந்தர்சியும் அம்மன் பாட்டு போட்டு கிளைமாக்ஸில் ஒட்டிவிடுவர்.நாயகன் சித்தார்த்துக்கு பெயருக்கு பாத்திரம், பாடல்களில் நடனமாடி செல்கிறார்.சூரி-கோவைசரளா-மனோபாலா கூட்டணியின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய பலம். பூனம் பஜ்வாவின் நடிப்பு ஒ.கே. ராதாரவி தனது அனுபவ நடிப்பால் படத்தில் மிளிர்கிறார். முதல் பாதியில் கவர்ச்சியில் கலக்கும் த்ரிஷா, இரண்டாம் பாதியில் பேயாக வந்து மிரட்டுகிறார்.ஹன்சிகாவுக்கு அழுத்தமான கதாபாத்திரம். ஹன்சிகாவை நடிப்பதற்கும் பயன்படுத்தும் இயக்குனர் சுந்தர்.சி தான். சுந்தர்.சி. சந்திரமுகி ரஜினி கேரக்டரை காப்பி செய்து நடித்திருக்கிறார்.  


மொத்தத்தில் அரண்மனை 2 தியேட்டரில் ஜாலியாய் குடும்பத்துடன் போய் பார்க்கக்கூடிய அக்மார்க் கமர்ஷியல் படம்.எல்லோரும் தியேட்டரில் பாருங்க...

அரண்மனை 2 : காமெடி கலந்த த்ரில்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory