» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடை அறிமுகம்!
வெள்ளி 2, ஜூன் 2023 11:12:25 AM (IST)
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடையை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வருகின்ற 7-ஆம் தேதி இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தனித்தனி புதிய சீருடையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் புதிய ‘கிட்-ஸ்பான்ஸர்’ அடிடாஸ் நிறுவனம் இந்த புதிய சீருடையை வடிவமைத்துள்ளது. இந்தாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி உலகக் கோப்பை போட்டிகள் என அடுத்தடுத்த சர்வதேச தொடர்கள் விளையாடவுள்ள நிலையில், புதிய சீருடை அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.