» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டெஸ்டில் 3 வருடங்களுக்குப் பிறகு விராட் கோலி சதம்!
திங்கள் 13, மார்ச் 2023 12:11:42 PM (IST)

டெஸ்டில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 3 வருடங்களுக்குப் பிறகு சதம் விளாசினார்.
அகமதாபாத் டெஸ்டில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் விராட் கோலி 3 வருடங்களுக்குப் பிறகு அடித்துள்ள சதம் இதுவாகும். கடைசியாக அவர், கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்திருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் அகமதாபாத் டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்தார். அந்த அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் விராட் கோலி அடித்துள்ள 16-வது சதம் இதுவாகும். இந்த வகை சாதனையில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 சதங்கள் விளாசி உள்ளார். விராட் கோலி 41 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு தற்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்துள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இது மிகப்பெரிய இடைவெளி.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17ல் மீண்டும் தொடக்கம் : அட்டவணை வெளியீடு!
செவ்வாய் 13, மே 2025 12:45:07 PM (IST)

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : விராட் கோலி அறிவிப்பு
திங்கள் 12, மே 2025 4:45:32 PM (IST)

போர் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!
வெள்ளி 9, மே 2025 11:50:20 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)

உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)

மும்பை அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
புதன் 7, மே 2025 3:46:04 PM (IST)
