» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஷுப்மன் கில் சதம், கோலி அரை சதம்: இந்தியா பதிலடி
சனி 11, மார்ச் 2023 5:21:42 PM (IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் 3-வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. இளம் வீரர் ஷுப்மன் கில் சதமும் கோலி அரை சதமும் எடுத்துள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் வியாழன் அன்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் எடுத்தது. கவாஜா 180, கிரீன் 114 ரன்கள் எடுத்தார்கள். அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை இன்று விளையாடி வருகிறது.
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, 58 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களைக் கடந்த 7-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா - கில் 74 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். இளம் வீரர் ஷுப்மன் கில், பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் 90 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.
3-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 65, புஜாரா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு ரன்கள் எடுப்பது சிரமமாக இருந்தது. கூர்மையான பந்துவீச்சும் ஸ்மித்தின் தலைமைப்பண்பும் இந்திய பேட்டர்களுக்குச் சவாலாக இருந்தன. இதனால் நிதானமாக ரன்கள் சேர்த்தார்கள் ஷுப்மன் கில்லும் புஜாராவும். 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுக்க 219 ரன்கள் தேவைப்பட்டன.
மிகவும் கவனமாக விளையாடிய ஷுப்மன் கில், 194 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இது அவருடைய 2-வது டெஸ்ட் சதம். 121 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த புஜாரா, மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். காயமடைந்ததன் காரணமாக கவனம் சிதறிய ஷுப்மன் கில், 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு விராட் கோலி - ஜடேஜா ஜோடி 3-வது நாள் முடியும் வரை பொறுப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. நீண்ட நாளாக டெஸ்டில் சரியாக விளையாடாமல் இருக்கும் விராட் கோலி, 107 பந்துகளில் அரை சதமெடுத்தார். 16 டெஸ்ட் இன்னிங்ஸில் அவர் எடுத்துள்ள முதல் அரை சதம் இது.
3-வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 99 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 59, ஜடேஜா 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 191 ரன்கள் பின்தங்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17ல் மீண்டும் தொடக்கம் : அட்டவணை வெளியீடு!
செவ்வாய் 13, மே 2025 12:45:07 PM (IST)

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : விராட் கோலி அறிவிப்பு
திங்கள் 12, மே 2025 4:45:32 PM (IST)

போர் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!
வெள்ளி 9, மே 2025 11:50:20 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)

உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)

மும்பை அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
புதன் 7, மே 2025 3:46:04 PM (IST)
