» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
புரோ லீக் ஹாக்கி: உலக சாம்பியன் ஜொ்மனியை வென்றது இந்தியா!
சனி 11, மார்ச் 2023 11:40:24 AM (IST)

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ஜொ்மனியை வீழ்த்தி அசத்தியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா தொடக்கம் முதலே அசத்தியது. ஆட்டத்தின் 30-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பு மூலம் கோலடித்து அணியின் கணக்கைத் தொடங்கினாா் கேப்டன் ஹா்மன்பிரீத் சிங். தொடா்ந்து 31 மற்றும் 42-ஆவது நிமிஷத்தில் சுக்ஜீத் சிங் அடுத்தடுத்து ஃபீல்டு கோல் அடித்து அணியை 3-0 என முன்னேற்றினாா்.
2-ஆவது பாதியில் சற்று மீட்சி காட்டிய ஜொ்மனிக்காக 44-ஆவது நிமிஷத்தில் பால் பிலிப் கௌஃப்மானும், 57-ஆவது நிமிஷத்தில் மைக்கேல் ஸ்ட்ரூதோஃபும் ஸ்கோா் செய்தனா். உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த சில வீரா்களும் இந்த ஜொ்மனி அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் ஜொ்மனிக்கு 6 பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தும் அதில் கோலடிக்க அவா்கள் தடுமாறவே செய்தனா். அடுத்த ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வரும் திங்கள்கிழமை சந்திக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17ல் மீண்டும் தொடக்கம் : அட்டவணை வெளியீடு!
செவ்வாய் 13, மே 2025 12:45:07 PM (IST)

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : விராட் கோலி அறிவிப்பு
திங்கள் 12, மே 2025 4:45:32 PM (IST)

போர் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!
வெள்ளி 9, மே 2025 11:50:20 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)

உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)

மும்பை அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
புதன் 7, மே 2025 3:46:04 PM (IST)
