» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய வங்கதேசம் : புதிய வரலாறு படைத்தது!

புதன் 5, ஜனவரி 2022 11:45:30 AM (IST)



டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வங்க தேசம் புதிய சாதனை படைத்துள்ளது. 

நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் மவுன்ட் மவுன்கானுவில் நடைபெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 328 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வங்கதேச அணி 458 ரன்கள் குவித்து. நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், நீல் வாக்னெர் 3 விக்கெட்டும், டிம் சவுதி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 130 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 169 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக வில் யங் 69 ரன்களும், ராஸ் டெய்லர் 40 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.  இதையடுத்து 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் அணி, டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்தை முதல் முறையாக தோற்கடித்து புதிய வரலாறு படைத்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory