» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வருண், ரசல் பந்துவீச்சில் சுருண்டது ஆர்சிபி: கொல்கத்தா அபார வெற்றி!

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 10:42:52 AM (IST)



ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

அபுதாபியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வருண் சக்கரவர்த்தியின் மாயாஜால சுழற்பந்துவீச்சு, ரஸலின் துல்லியமானப் பந்துவீச்சு ஆகியவற்றால் பெங்களூரு அணியால் ரன்களை குவிக்க முடியவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் ஆகிய 3 வீரர்களுமே சொதப்பிவிட்டனர். கோலி(5), மேக்ஸ்வெல்(10), டிவில்லியர்ஸ்(0) என 3 பெரிய தூண்களுமே சரிந்தது.  ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதலில் பேட் செய்து, சேர்த்த மிகக் குறைவான 3-வது ஸ்கோர் இதுவாகும். 

இதையடுத்து 93 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளியஇலக்கை துரத்திய கொல்கத்தா அணி திட்டமிட்டு களமிறங்கியது. நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும், விக்கெட்டுகளை இழக்கக்கூடாது என்ற எண்ணத்தில் கில், வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். காயத்திலிருந்து மீண்டு வந்த ஷுப்மான் கில் மீண்டும் ஃபார்முக்கு வந்தது போல் சிறப்பாக பேட் செய்தார், அறிமுக வீரரான வெங்கடேஷ் ஐயர் அருமையான ஷாட்களை ஆடி ஆர்சிபி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 

இருவரின் அதிரடி ஆட்டத்தால் பவர்ப்ளேயில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்தது. ஷுப்மான் கில் 34 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்த நிலையில் சஹல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து ரஸல் களமிறங்கினார். ஆனால், ரஸலுக்கு எந்த வேலையும் வைக்காமல் வெங்கடேஷ் ஐயரே பணியை முடித்தார். 27 பந்துகளில் 41 ரன்களுடன் வெங்கடேஷ் ஐயர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கொல்கத்தா அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்து 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி என 6 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் 5-வது இடத்துக்கு முன்னேறியது. முதல்சுற்றில் சிறப்பான வெற்றிகளை ஆர்சிபி பெற்றதால் 10 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் நீடிக்கிறது. ஆனால், ஆர்சிபி அணியின் நிகர ரன்ரேட் மோசமாக இருப்பதால், அடுத்தடுத்துவரும் போட்டிகளில் பிற அணிகள் பெறும் வெற்றி பாதிக்கக் கூடும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory