» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் திடீர் விலகல்

வெள்ளி 10, செப்டம்பர் 2021 12:49:36 PM (IST)

டி-20 உலக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் கேப்டன் பதவியை ரஷித் கான் ராஜினாமா செய்துள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், டி20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. கேப்டனாக ரஷித் கான் அறிவிக்கப்பட்ட அந்த அணியில், இரண்டு மாற்று வீரர்கள் உள்பட மொத்தம் 20 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
 
இந்நிலையில், டி20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ரஷித் கான் ராஜினாமா செய்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படும்போது கேப்டன் என்ற முறையில் தேர்வுக் குழுவினர் தன்னிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தன்னிடம் கலந்து ஆலோசிக்காமலேயே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ரஷித் கான் தெரிவித்துள்ளார்.ரஷித் கான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முகமது நபி செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory