» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மனைவியைப் பிரிந்தார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன்

வியாழன் 9, செப்டம்பர் 2021 4:33:45 PM (IST)

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன், தனது மனைவி அயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவன், 2012-ல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அயிஷாவைத் திருமணம் செய்தார். அயிஷாவுக்கு இது 2-வது திருமணம். முதல் திருமணத்தில் ஆஸ்திரேலியத் தொழிலதிபரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார். ஷிகர் தவனைத் திருமணம் செய்த பிறகு 2014-ல் ஸோராவர் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. அயிஷா, சர்வதேச அளவில் கிக்பாக்ஸிங்கில் பங்கேற்றுள்ளார். 
 
46 வயது அயிஷா, விவாகரத்து குறித்து இன்ஸ்டகிராமில் மிகவும் உருக்கமான பதிவு எழுதியுள்ளார். 2-வது முறை விவாகரத்து செய்யும் வரை விவாகரத்து என்பதை மோசமான வார்த்தையாக எண்ணியிருந்தேன். முதல்முறை விவாகரத்து ஆனபோது மிகவும் பயந்து போனேன். நான் தோற்றுவிட்டேன் என்றும் அப்போது தவறு செய்கிறேன் என்றும் நினைத்தேன். மிகவும் சுயநலமாக நடந்துகொண்டு பெற்றோர், என் குழந்தைகள், கடவுள் என எல்லோரையும் ஏமாற்றியதாக எண்ணினேன். 

விவாகரத்து ஒரு மோசமான வார்த்தை. நினைத்துப் பாருங்கள். இப்போது விவாகரத்தை மீண்டும் எதிர்கொண்டுள்ளேன். இது பயங்கரமாக உள்ளது. 2-வது முறை என்னை நிறைய நிரூபிக்கவேண்டும் என எண்ணினேன்.  2-வது திருமணமும் உடைந்ததால் அச்சத்தில் இருந்தேன். பயம் தோல்வி, ஏமாற்றம் எல்லாம் 100 மடங்கு கூடுதலாக இருந்தன. இது எனக்கு என்ன சொல்கிறது? இது என்னை, திருமண உறவில் எப்படி வெளிப்படுத்துகிறது?  

இதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உணர்வுகளையும் எதிர்கொண்ட பிறகு அமர்ந்து யோசித்துப் பார்த்தேன். நான் நலமுடன் உள்ளேன். பயம் போய்விட்டது. இப்போது கூடுதல் உரிமை கொண்டவளாக உள்ளேன். எனது பயமும் விவாகரத்துக்கு நான் அளித்த அர்த்தமும் நானே உருவாக்கியவை என்று கூறியுள்ளார். 35 வயது ஷிகர் தவன் இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 145 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory