» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வருகை: கைகுலுக்க, செல்பி எடுக்க தடை!

செவ்வாய் 10, மார்ச் 2020 4:30:08 PM (IST)3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியா வந்தது.

குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக தென் ஆப்பிரிக்க வீரர்கள் நேற்று அதிகாலை விமானம் மூலம் டெல்லி வந்தனர்.. பின்னர் தென்ஆப்பிரிக்க அணியினர் முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறும் தர்மசாலாவுக்கு புறப்பட்டு சென்றனர். 

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் வருகிற 12-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி லக்னோவில் 15-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் 18-ந் தேதியும் நடக்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தென்ஆப்பிரிக்க அணியினருடன் டாக்டர் சுயப் மஞ்ச்ரா வந்துள்ளார். 

தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் அளித்த ஒரு பேட்டியில், ‘எங்கள் அணியின் மருத்துவர் சொல்லும் அறிவுரையின் படி நாங்கள் செயல்படுவோம். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்திய வீரர்களுடன் முறைப்படி கைகுலுக்குவது குறித்து சூழ்நிலைக்கு தகுந்தபடி முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார். தென்ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு ரசிகர்களுடன் கைகுலுக்கவும், கலந்துரையாடவும், செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory