» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

500 டி-20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள்: பொல்லார்ட் புதிய சாதனை!

வியாழன் 5, மார்ச் 2020 3:29:55 PM (IST)

500  டி-20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட்இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் 20 ஓவர் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 500-வது ஆட்டத்தில் விளையாடி சாதனை படைத்தார். உள்ளூர், லீக் மற்றும் சர்வதேசம் உள்பட அனைத்து வகையான 20 ஓவர் போட்டிகளிலும் 500 ஆட்டத்தில் விளையாடிய முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
 
இந்த ஆட்டத்தில் பொல்லார்ட் 15 பந்தில் 34 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் மொத்தம் 10 ஆயிரம் ரன்னை தொட்டார். 500 ஆட்டத்தில் 450 இன்னிங்சில் விளையாடி 10 ஆயிரம் ரன் குவித்துள்ளார். அதிகபட்சமாக 104 ரன் எடுத்துள்ளார். ஒரு சதம், 49 அரைசதம் அடித்துள்ளார்.

20 ஓவர் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது வீரர் என்ற சாதனையை பொல்லார்ட் படைத்தார். கிறிஸ் கெய்ல் 404 ஆட்டத்தில் விளையாடி 13,296 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். மெக்கல்லம் (நியூசிலாந்து) 9,922 ரன்னுடன் 3-வது இடத்திலும், சோயிப் மாலிக் (பாகிஸ்தான்) 9,746 ரன்னுடன் 4-வது இடத்திலும், வார்னர் (ஆஸ்திரேலியா) 9,218 ரன்னுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory