» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விளையாட்டுப் போட்டியில் முதலிடம் : எஸ்பி பாராட்டு

செவ்வாய் 4, பிப்ரவரி 2020 5:33:18 PM (IST)தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப்பணியாளர்களுக்கான 2019-2020ம் ஆண்டுக்கான மாநில அளவில் நடைபெற்ற 59வது விளையாட்டுப் போட்டியில் முதலிடத்தைப்பிடித்து விருது பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அமைச்சுப்பணியாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பாராட்டினார்.

இவ்விளையாட்டுப் போட்டி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 31.01.2020 முதல் 02.02.2020 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் சார்பில், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய சரகங்களிலிருந்தும், சென்னை தலைமையிடம், சென்னை பெருநகர காவல்துறை, செயலாக்கப் பிரிவு (I.G Operation), ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஆகியவற்றிலிருந்து சுமார் 500 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, இறகு பந்து, கைபந்து, பூப்பந்து, கபாடி போட்டி, கேரம் போர்டு, செஸ் போன்ற பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் கபாடி போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் சார்பில் போட்டியிட்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அமைச்சுப்பணியாளர்களான மயில்குமார், கணேசப்பெருமாள், கதிரேசன், சேர்மத்துரை, கோபிநாத், மேண்ட்லி, முனியசாமி, முத்துச்சாமி, இராமஜெயம், ராஜ்குமார் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுரேந்திரபாண்டியன், செல்வகுமார், சுப்பையா, சீனிவாசன், ராஜசூரியன், மார்க்தாசன், ரஞ்சித்பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து விருது பெற்றுள்ளனர்.

இதில் தமிழ்நாடு அளவில் சிறந்த கபாடி ஆட்டக்காரராக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அமைச்சுப்பணியாளர் கதிரேசன் தேர்வு பெற்று விருது பெற்றுள்ளார். வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட அமைச்சுப்பணியாளர்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory