» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தொடக்க வீரர்களாக புதியவர்களுக்கு வாய்ப்பு : விராட் கோலி அறிவிப்பு!

செவ்வாய் 4, பிப்ரவரி 2020 4:56:43 PM (IST)

கடந்த சில வருடங்களாக இந்திய ஒருநாள் அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவன், ராகுல் ஆகியோரை மட்டுமே பார்த்த நிலையில் நியூஸிலாந்து மண்ணில் இரு புதிய தொடக்க வீரர்களுடன் களமிறங்கவுள்ளது இந்திய அணி. 

இதுகுறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது: பிரித்வி ஷா தொடக்க வீரராக விளையாடுவார். ரோஹித்துக்கான மாற்று வீரர், தொடக்க வீரராக இருப்பார். கே.எல். ராகுல் நடுவரிசையில் விளையாடுவார். அந்த நிலையில் அவர் தொடர்ந்து நன்கு விளையாட வேண்டும் என விரும்புகிறோம். அதேபோல விக்கெட் கீப்பராகவும் அவர் செயல்படுவார். 

டெஸ்ட், ஒருநாள், டி20 என எல்லா வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் ரோஹித் சர்மாவின் பெயர் அணிப் பட்டியலில் முதலில் இருக்கும். அவர் டி20 தொடரில் முழுமையாக விளையாடியுள்ளதால் டி20 உலகக் கோப்பைக்காகத் தயாராவதில் எவ்விதச் சிக்கலும் ஏற்படவில்லை. புதிதாக வாய்ப்பு கிடைத்தவர்கள் எப்படி அதை உபயோகிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறியுள்ளார். 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory