» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆடையைக் களைந்து நின்ற உமர் அக்மல்: ஒழுங்கு நடவடிக்கை பாய்கிறது!!

செவ்வாய் 4, பிப்ரவரி 2020 11:08:09 AM (IST)

உடற்தகுதி பயிற்றுநர் முன் ஆடைகளைக் களைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக உமர் அக்மல்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருகிறது.

உடற்தகுதிச் சோதனையில் தோல்வியடைந்த உமர் அக்மல், கோபமடைந்து என் உடலில் எங்கு கொழுப்பு இருக்கிறது என்று கூறுங்கள் என்று ஆடைகளைக் களைந்து நின்ற உமர் அக்மலுக்குக் கடும் தண்டனை கிடைக்குமென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது அடுத்த உள்நாட்டுத் தொடருக்கு உமர் அக்மல் முழுதும் தடை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அகாடமியில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்ரன் அக்மல், உமர் அக்மல் சகோதரர்களுக்கு உடற்தகுதி எப்போதும் ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்தது, மிக்கி ஆர்தர் பயிற்சியாளராக இருந்த போது அக்மல் சகொதரர்களை அவர் நீக்கினார்.இந்நிலையில் தொடர்ந்து உடற்தகுதியைக் காரணம் காட்டி தன்னை நிராகரிப்பதில் கோபமடைந்த உமர் அக்மல், பயிற்றுநர் முன்னிலையில் ஆடையைக் களைந்து ‘என் உடலில் எங்கு கொழுப்பு உள்ளது, கூறுங்கள்’ என்று கேட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

2009-ல் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் கண்ட உமர் அக்மல், 16 டெஸ்ட் போட்டிகளில் 1003 ரன்களை எடுத்துள்ளார். 121 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்களுடன் 3,194 ரன்களை எடுத்துள்ளார், அதிகபட்ச ஸ்கோர் 102 நாட் அவுட். 84 டி20 சர்வதேசப்போட்டிகளில் உமர் அக்மல் 1690 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 94, 8 அரைசதங்களை எடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory