» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தமிழ் நடிகையை மணந்தார் மணிஷ் பாண்டே!!

செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:47:40 PM (IST)இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், கர்நாடக அணியின் கேப்டனுமான மணிஷ் பாண்டே தமிழ் நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே. இவர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் கர்நாடகா 1 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் மணிஷ் பாண்டே 45 பந்தில் 60 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் நேற்று காலை மும்பையில் தமிழ் நடிகையான அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். அவர் இடம்பிடித்துள்ள ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் திருமண வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory