» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்திய வேகப்பந்து வீச்சு எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் - கோலி பெருமிதம்
ஞாயிறு 17, நவம்பர் 2019 7:51:33 PM (IST)

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி (7 விக்கெட்), இஷாந்த் ஷர்மா (3), உமேஷ் யாதவ் (4) ஆகியோர் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். இந்நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வேகப்பந்து வீச்சாளர்களை கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது: எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சு திறனில் உச்சத்தில் உள்ளனர். இவர்கள் பந்து வீசும்போது, எந்த ஆடுகளமும், நல்ல ஆடுகளமாகவே தோன்றுகிறது. அவர்களுக்கு எனது பாராட்டுகள். ஒவ்வொரு பகுதிகளிலும் நமது பவுலர்கள் விக்கெட் எடுக்கிறார்கள். எந்த ஒரு கேப்டனும் இத்தகைய வலிமையான பந்து வீச்சைத்தான் விரும்புவார். இது பந்து வீச்சில் ஒரு கனவு கூட்டணி போன்று உள்ளது.
சாதனைகளையும், புள்ளி விவரங்களையும் ஒவ்வொருவரும் பார்க்கிறார்கள். அது தொடர்ந்து சாதனை புத்தகத்தில் தான் இருக்கும். நாங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. நாங்கள் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை மென்மேலும் மேம்படுத்துவதை நோக்கி பயணிக்கிறோம். இதற்காக அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்துகிறோம். இந்திய அணிக்காக முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிங்க் பந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். பந்து பழசான பிறகு அதிகமாக ‘ஸ்விங்’ ஆகாது என்று கருதுகிறேன் என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினிகாந்த் பிறந்தநாள்: சச்சின், ஹர்பஜன் வாழ்த்து!!
வியாழன் 12, டிசம்பர் 2019 4:52:00 PM (IST)

ரோஹித், ராகுல், கோலி அதிரடி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா
வியாழன் 12, டிசம்பர் 2019 8:58:59 AM (IST)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் : இந்திய அணியில் மயங்க் அகர்வால்!!
புதன் 11, டிசம்பர் 2019 3:49:12 PM (IST)

மோசமாக ஃபீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பத்தாது: விராட் கோலி வேதனை!
திங்கள் 9, டிசம்பர் 2019 3:16:16 PM (IST)

விராட் கோலி விஸ்வரூபம்: முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
சனி 7, டிசம்பர் 2019 10:42:20 AM (IST)

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி மீண்டும் முதலிடம்: ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளினார்!!
புதன் 4, டிசம்பர் 2019 5:47:28 PM (IST)
