» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகாத தமிழக வீரர்: ஆர்ஜே பாலாஜி ஆதங்கம்!

சனி 2, நவம்பர் 2019 5:23:53 PM (IST)



சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகாத தமிழக வீரர் அபினவ் முகுந்துக்காக ஆர்ஜே பாலாஜி வருத்தம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தைச் சேர்ந்த 29 வயது அபினவ் முகுந்த், இந்திய அணிக்காக 7 டெஸ்டுகளில் விளையாடி 2 அரை சதங்களை எடுத்துள்ளார். கடைசியாக 2017-ல் இலங்கைக்கு எதிராக விளையாடி 2-வது இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்தார். எனினும் அதற்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு முகுந்துக்குக் கிடைக்கவில்லை. இந்த வருட விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழக அணி இறுதிச்சுற்றில் கர்நாடக அணியிடம் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் 12 ஆட்டங்களில் விளையாடி 600 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்தார் முகுந்த். கடந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் 9 ஆட்டங்களில் விளையாடி 560 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் முகுந்த்.  

எனினும் இந்திய அணிக்கான தேர்வுக்குழு முகுந்தைச் சீந்தவில்லை. தற்போது நடைபெற்று வரும் தியோதர் கோப்பைக்கான மூன்று அணிகளிலும் முகுந்துக்கு இடம் கிடைக்கவில்லை.  முகுந்தின் இந்த நிலைமை கண்டு வருந்தாத தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களே இருக்கமுடியாது. நடிகர் ஆர்ஜே பாலாஜியும் தன்னுடைய வருத்தத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: ஐபிஎல்-லில் ஒவ்வொருமுறையும் யாராவது 50, 100 ரன்கள் அடித்தால் அந்த வீரர் இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என விரும்புவோம். விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் மூன்று முறை தலா 500 ரன்கள் எடுத்த ஒரே வீரர் - அபினவ் முகுந்த் மட்டுமே. இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த 2-வது வீரர். இந்திய அணிக்குத் தேர்வாவதை விடுங்கள், தியோதர் கோப்பைப் போட்டிக்குக்கூட அவர் தேர்வாகவில்லை. 

மேலும், இந்திய அணிக்காகக் கடைசியாக விளையாடிய இன்னிங்ஸில் அவர் இலங்கைக்கு எதிராக 81 ரன்கள் எடுத்தார். பிறகு இந்திய அணிக்கு அவர் தேர்வாகவே இல்லை. ஆமாம், 81 ரன்கள் எடுத்த பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு 29 வயதுதான். தொடர்ந்து விளையாடி போராடுங்கள் முகுந்த் என்று ஆர்ஜே பாலாஜி எழுதியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory