» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரே டெஸ்ட்டில் 2வது சதம்: அதிக சிக்ஸர்கள் ரோஹித் சர்மா சாதனை

சனி 5, அக்டோபர் 2019 4:47:27 PM (IST)தொடக்க வீரராகக் களமிறங்கிய முதல் டெஸ்டிலேயே உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் சர்மா. 

இதற்கு முன்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தவொரு பேட்ஸ்மேனும் 12 சிக்ஸர்களுக்கு அதிகமாக அடித்ததில்லை. வாசிம் அக்ரம் தான் 12 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தார். அதனை முறியடித்து 13 சிக்ஸர்களை இந்த டெஸ்டில் அடித்துள்ளார் ரோஹித் சர்மா. 127 ரன்கள் எடுத்த 2-வது இன்னிங்ஸில் 7 சிக்ஸர்கள் அடித்துள்ளார் ரோஹித் சர்மா. 

ஒரு டெஸ்டில் அதிக சிக்ஸர்கள்

13 ரோஹித் சர்மா
12 வாசிம் அக்ரம் 

இதேபோல இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து மேலும் சில சாதனைகளை ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

ஒரே டெஸ்ட்டில் 2வது சதம்: ரோஹித் சர்மா சாதனை

சுனில் கவாஸ்கருக்குப் பிறகு தொடக்க வீரராக ஒரே டெஸ்ட்டில் 2வது சதம்: ரோஹித் சர்மா சாதனை

விசாகப்பட்டிணம் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் பெரிய சதம் கண்ட ரோஹித் சர்மா, மீண்டும் 2வது இன்னிங்சிலும் சற்று முன் சதம் கண்டு சாதனை படைத்துள்ளார்.

சுனில் கவாஸ்கருக்குப் பிறகு எந்த ஒரு இந்திய தொடர்க்க வீரரும் ஒரே டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் கண்டதில்லை, அந்த வகையில் ரோஹித் சர்மா என்ற இன்னொரு மும்பை வீரர் சுனில் கவாஸ்கரின் சாதனையைச் சமன் செய்துள்ளார். மொத்தமாக இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ரோஹித் சர்மா.
விஜய் ஹசாரே
சுனில் கவாஸ்கர் (3 தடவை)
ராகுல் டிராவிட் (2 தடவை)
விராட் கோலி 
ரஹானே
ரோஹித் சர்மா

ஓர் ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர் 

டெஸ்டுகள் - ரோஹித் சர்மா (13)
ஒருநாள் - ரோஹித் சர்மா (16)
டி20: ரோஹித் சர்மா (10)

* இதற்கு முன்பு 137 முதல் தர கிரிக்கெட் இன்னிங்ஸில் ஒருமுறை கூட ரோஹித் சர்மா ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்ததில்லை. ஆனால், இந்த டெஸ்டில் இரு முறை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதுபோல இருமுறையும் ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரரும் இவர்தான். 

* தொடக்க வீரராகக் களமிறங்கிய முதல் டெஸ்டிலேயே இரு சதங்கள் அடித்த முதல் வீரர், ரோஹித் சர்மா. 

* இந்தியாவில் தொடர்ச்சியாக 7 இன்னிங்ஸில் 50+ ஸ்கோர்களை எடுத்த முதல் வீரர், ரோஹித் சர்மா. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory