» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கிரிக்கெட் ஆலோசனைக் குழு தலைவர் பதவியில் இருந்து கபில் தேவ் விலகல்!

புதன் 2, அக்டோபர் 2019 5:32:19 PM (IST)

கிரிக்கெட் ஆலோசனைக் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி ஒருவர் கிரிக்கெட் அமைப்பில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளில் இருக்கக்கூடாது. சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை நியமனம் செய்த கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியினர் இரட்டை ஆதாய பதவிகளில் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அது குறித்து பதில் அளிக்கும்படி மூன்று பேருக்கும் கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சாந்தா ரங்கசாமி, கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் இயக்குனர் பதவி இரண்டையும் நேற்று ராஜினாமா செய்து அதற்குரிய கடிதத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டிக்கு அனுப்பி வைத்தார்.இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மூன்று பேர் கொண்ட தற்காலிக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (சிஏசி) தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கிரிக்கெட் ஆலோசனைக் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தை  அனுப்பியுள்ளார் என  ஐ.ஏ.என்.எஸ் செய்தி  நிறுவனம் தெரிவித்து உள்ளது. நிர்வாகக் குழுவிலிருந்து (COA) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்க வேண்டும், இது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமே செய்யப்பட்ட நியமனம் என்பதால்  அந்தக் குழு கலைக்கப்படுகிறது. இந்த விஷயத்தில்,  மோதல் கதைகளை தவிர்த்து இருக்கலாம் என்று கிரிக்கெட்  வட்டாரம் மேலும் கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory