» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கால்பந்துப் போட்டி: வ.உ.சி. துறைமுகம் அணி வெற்றி

திங்கள் 30, செப்டம்பர் 2019 3:11:05 PM (IST)தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய பெரிய துறைமுகங்களுகிடையேயான கால்பந்துப் போட்டியில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கோப்பையை வென்றது.

அகில இந்திய பெரிய துறைமுகங்களின் விளையாட்டு கட்டுபாட்டு குழு மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக விளையாட்டு குழுவினரால், அகில இந்திய பெரிய துறைமுகங்களுகிடையேயான கால்பந்து போட்டியினை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா. கி. ராமச்சந்திரன், கடந்த 25ம் தேதி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் கொச்சின், பாரதீப், மும்பை, விசாகபட்டணம், சென்னை, கொல்கத்தா மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்ளடக்கிய ஏழு பெரிய துறைமுகங்களின் கால்ப்பந்தாட்ட அணியினர் இந்த போட்டிகளில் பங்கு பெற்றனர். இதன் இறுதிப் போட்டியில் வ.உ.சிதம்பரனார் துறைமுக கால்பந்தாட்ட அணியினை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடியது. 

இப்போட்டியில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கொச்சின் மற்றும் சென்னை துறைமுகங்கள் மூன்றாவது இடத்தை பிடித்தன. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக பொறியாளரும், விளையாட்டு கழக தலைவருமான ரவிக்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நா. வையாபுரி, வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்த அணிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்போட்டியினை துறை தலைவர்கள், உயர் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கண்டுகழித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory