» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20: போராடி வென்றது இந்திய அணி
ஞாயிறு 4, ஆகஸ்ட் 2019 5:03:24 PM (IST)

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டம் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் சைனி 3, புவனேஸ்வர் குமார் 2, வாசிங்டன் சுந்தர், கலில் அகமது, குருணால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி வீரர்கள் ரோகித் 24, தவான், 1, விராட் கோலி 19, ரிஷப் பந்த் 0, மனிஸ் பாண்டே 19, குணால் பாண்டியா 12, ஆகியோர் வெளியேறினர். இதனையடுத்து ஜடேஜா (10), வாசிங்டன் சுந்தர் (9) இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கொட்ரெல், சுனில் நரேன், பவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோசமாக ஃபீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பத்தாது: விராட் கோலி வேதனை!
திங்கள் 9, டிசம்பர் 2019 3:16:16 PM (IST)

விராட் கோலி விஸ்வரூபம்: முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
சனி 7, டிசம்பர் 2019 10:42:20 AM (IST)

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி மீண்டும் முதலிடம்: ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளினார்!!
புதன் 4, டிசம்பர் 2019 5:47:28 PM (IST)

தமிழ் நடிகையை மணந்தார் மணிஷ் பாண்டே!!
செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:47:40 PM (IST)

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தவான் விலகல்: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு
புதன் 27, நவம்பர் 2019 4:54:29 PM (IST)

அசாருதின், அம்பத்தி ராயுடு மோதல்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் புயல்!!
திங்கள் 25, நவம்பர் 2019 5:36:27 PM (IST)
