» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள்: பும்ரா புதிய சாதனை

சனி 6, ஜூலை 2019 5:32:57 PM (IST)

ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த 2-வது இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லீட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 

இந்திய அணியில் சஹால், ஷமிக்குப் பதிலாக குல்தீப், ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். இந்நிலையில் தொடக்க வீரரும் இலங்கை அணி கேப்டனுமான கருணாரத்னேவை 10 ரன்களில் வீழ்த்தினார் பும்ரா. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார்.

மேலும் 100 விக்கெட்டுகளை அதிவிரைவாக எடுத்த 2-வது இந்தியர் என்கிற பெருமையையும் அவர் பெற்றார். குறைந்த ஒருநாள் ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்கள் பட்டியல் வருமாறு : 
  • ஷமி (56 போட்டிகள்) 
  • பும்ரா (57 போட்டிகள்) 
  • இர்பான் பதான் (59 போட்டிகள்) 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory