» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெற்றியுடன் வெளியேறியது பாகிஸ்தான்: அரையிறுதி கனவு தகர்ந்ததால் சோகம்

சனி 6, ஜூலை 2019 11:31:38 AM (IST)உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இமாம் உல் ஹக்கின் சதம், ஷாகீன் ஷா அப்ரிடியின் 6 விக்கெட் ஆகியவற்றால் வங்கதேச அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி.

இந்த போட்டியில் வென்றபோதிலும்கூட பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு தகுதிபெற முடியவில்லை. வங்கதேச அணியை 7 ரன்களுக்குள் சுருட்டினால்தான் அரையிறுதி வாய்ப்பு என்ற நிலையில், வங்கதேச அணி 8-வது ரன்னை அடித்தபோதே பாகிஸ்தானின் அரையிறுதி கனவு தகர்ந்துவிட்டது. லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது. 316 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும்இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 44.1 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்து 94 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியி்ல் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சதம் அடித்தார், இளம் வீரர் ஷாகின் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்து ஆட்டநாயகன் வென்றார், 

316 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. அரையிறுதிக்கு தகுதிபெற முடியாது என்பதால் என்னவோ தன்னம்பிக்கையற்ற பேட்டிங் வீரர்களிடம் தெரிந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பால்(8), சவுமியா சர்க்கார்(22)ரன்னில் ஆட்டமிழந்தனர். அனுபவ வீரர் சகிப் அல் ஹசன் களத்தில் நின்று 64 ரன்கள் சேர்த்து வெளியேறினார். மற்ற வீரர்களான முஷ்பிகுர் ரஹ்மான்(16), லிட்டன் தாஸ்(32), மகமதுல்ல(29), மொசாடக் ஹூசைன்(16) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

சகிப்அல்ஹசன் ஆட்டமிழந்தபோது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்திருந்தது வங்கதேசம். அதன்பின் அடுத்த 12 ஓவர்்களில் 67 ரன்கள் சேர்த்து மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுகளையும், சதாப்கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியி்ல் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சதம் அடித்தார், இளம் வீரர் ஷாகின் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்து ஆட்டநாயகன் வென்றார், மூத்த வீரரும் சானியா மிர்சாவின் கணவருமான ஷோயப் மாலிக் 20 ஆண்டுகள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவை அனைத்தும் நடந்தும் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு செல்லாத வெற்றி மகிழ்ச்சி அளிக்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory