» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து : புதிய வரலாறு படைத்தது!!

வியாழன் 4, ஜூலை 2019 10:51:03 AM (IST)கிரிக்கெட் போட்டியை உலகிற்க்கு அறிமுகம் செய்த இங்கிலாந்து , 1992-ம் ஆண்டுக்குப்பின் இந்தமுறைதான் உலகக் கோப்பை அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றது.

10 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நேற்று நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் இல்லை. நியூசிலாந்து அணியில் லேசான காயத்தால் அவதிப்படும் லோக்கி பெர்குசன் மற்றும் சோதி ஆகியோர் நீக்கப்பட்டு மேட் ஹென்றி, டிம் சவுதி சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அதிரடிக் கூட்டணி பேர்ஸ்டோ, ஜேஸன் ராய் இருவரும் முதல் விக்ெகட்டுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் நியூஸிலாந்து பந்துவீச்ச நொறுக்கினார்கள். பேர்ஸ்டோ 46 பந்துகளிலும், ராய் 55 பந்துகளிலும் அரைசதம் அடிதத்தனர். முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ராய் 60 ரன்னில் வெளியேறினார். 

அடுத்துவந்த ரூட், பேர்ஸ்டோவுடன் சேர்ந்து 71 ரன்கள் கூட்டணி சேர்த்துப் பிரிந்தார். ரூட் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ 95 பந்துகளில், தனது 9-வது சதத்தைப் பதிவு செய்தார். உலகக்கோப்பைப் போட்டியில் தொடர்ந்து 2-வது சதத்தை அடித்தார். அடுத்த சிறிதுநேரமே களத்தில் இருந்த பேர்ஸ்டோ 106 ரன்னில்(15பவுண்டரி,ஒரு சிக்ஸர்) ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சராசரியாக 20 ரன்களுக்குள்ளாகவே வீழ்ந்தனர். 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து. நியூஸிலாந்து தரப்பில் நீஷம், ஹென்றி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 306 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 45 ஓவர்களில் 186 ரன்களில் சுருண்டு 119 ரன்களில் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சதம் அடித்து அசத்திய பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் 1992-ம் ஆண்டுக்குப்பின், அதாவது 27 ஆண்டுகளுக்குப்பி்ன் அரையிறுதிக்குள் இங்கிலாந்து அணி சென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் 27 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியையும், நியூஸிலாந்து அணியையும் இங்கிலாந்து அணி இந்த முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டின் தாய்வீடான இங்கிலாந்து கடந்த 44 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல், தவித்து வரும் நிலையில் அதற்கு இன்னும் 2 வெற்றிகள் மட்டுமே தேவைப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory